search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம காய்ச்சல்"

    • சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதி
    • தண்ணீரை கொதிக்கவைத்து குடிக்க அறிவுரை

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த குன்னத் தூர் ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததி குடியிருப்பு பகுதியில் 4 குடும்பத்தை சேர்ந்த 19 பேர் வசித்து வருகின்றனர்.

    அவர்களில் 6 பெரியவர்கள், 4 சிறுவர்கள் என மொத்தம் 10 பேர் திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சோளிங்கர் வட்டார மருத்துவ அலுவலர் கோபிநாத் மற்றும் மருத்துவ குழுவினர் சென்று காய்ச்சல் குறித்து கேட்டறிந்தார். குடிநீர், ரத்தம் மாதிரிகள் எடுத்துக்கொண்டனர்.

    பனிக்காலம் என்பதால் அனைவரும் தண்ணீரை கொதிக்கவைத்து குடிக்க வேண்டும், லேசான காய்ச்சல் ஏற்படும் போதே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினர்.

    • ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவ, மாணவி களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
    • மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்று மாணவ,மாணவிகளின் பெற்றோர்களும், பொதுமக்களும் வலியுறியுத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவ, மாணவி களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.மேலும் சூழிநிலை மாற்றத்தாலும் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    அரையாண்டு தேர்வு நடந்த நிலையில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தவித்து ள்ளனர்.

    கிராமப்புற பகுதிகளில் இந்த பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    இதையடுத்து பள்ளிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி பரிசோதனை நடத்தி உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்று மாணவ,மாணவிகளின் பெற்றோர்களும், பொதுமக்களும் வலியுறியுத்தி வருகின்றனர்.

    இது குறித்து கல்வித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது இந்த விவகாரம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விரைவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் கலந்து ஆலோசனை நடத்தி மருத்துவ முகாம்கள் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளனர்.கொரோனா தொற்றின் அடுத்த பரவல் பல்வேறு நாடுகளில் பரவி வரும் சூழலில் சாதாரண காய்ச்சல் கூட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது.

    • ஆலங்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
    • அதிக அளவில் முகாம்கள் நடத்தி, காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அழகாபுரி தெற்குதெருவை சேர்ந்தவர் லிங்கராஜ். இவருக்கு 9 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக குழந்தைக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த குழந்தைக்கு திடீரென காய்ச்சலுடன், மூச்சுத்திணறலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதைக்கேட்டு குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். ஆலங்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் அதிகமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், எனவே அதிக அளவில் முகாம்கள் நடத்தி, காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    • சிறுமிக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரது பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
    • காய்ச்சல் வந்த மூன்றே நாட்களில் மகளை இழந்து தவிக்கிறோம் என்று பெற்றோர் வேதனையுடன் தெரிவித்தனர்.

    போரூர்:

    மதுரவாயல் வேல்நகர் 4-வது தெருவில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவரது மனைவி சுஜிதா. இவர்களது மூத்த மகள் பூஜா (வயது 13). விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூஜாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மகளை அழைத்து சென்றனர். அப்போது பூஜாவுக்கு லேசான காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பூஜாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பூஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

    சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரது பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, மகளுக்கு டெங்கு காய்ச்சலா? பன்றி காய்ச்சலா ? அல்லது எச்1 என் 1 ப்ளூயன்சா வைரஸ் பாதிப்பா? என எந்தவிதமான உரிய விளக்கமும் டாக்டர்கள் இதுவரை எங்களுக்கு தெரிவிக்கவில்லை. காய்ச்சல் வந்த மூன்றே நாட்களில் மகளை இழந்து தவிக்கிறோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து சிறுமி வசித்த பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மண்டல சுகாதார அதிகாரி பிரபாகரன் கூறும்போது:-

    சிறுமியின் மருத்துவ அறிக்கை இதுவரை எங்களுக்கு வரவில்லை. அதன் பின்னரே சிறுமி இறப்புக்கு என்ன காரணம் என்பது தெரியவரும் மேலும் 144-வது வார்டுக்கு உட்பட்ட அந்த பகுதியில் மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் வழக்கமாக கொசு மருந்து அடிப்பது, மற்றும் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றுவது ஆகிய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே மர்ம காய்ச்சலுக்கு இரண்டரை வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
    • காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிந்துப்பட்டி போலீஸ் சரக்கத்திற்குட்பட்ட தும்மக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மனைவி பாண்டி சுவாதி. இவர்களுக்கு மோஷிகா ஸ்ரீ (வயது 2) குழந்தை இருந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயாண்டிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் மனைவி உதவியாக இருந்தார்.

    இதன் காரணமாக பாண்டி சுவாதி தனது மகள் மோஷிகாவை நாட்டார் மங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுச் சென்றார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மோஷிகா ஸ்ரீவுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. மருத்துவரிடம் காண்பித்தும் காய்ச்சல் குறையவில்லை‌. சம்பவத்தன்று உடல்நிலை மோசமானதால் குழந்தையை செக்கா னூரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு உடல்நிலை மிகவும் மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டாள். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மர்ம காய்ச்சலால் சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தும்மக்குண்டு, நாட்டார்மங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பலருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்து வருகிறது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக முகாமிட்டு அந்த பகுதியில் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காய்ச்சலுக்கு வழங்கப்படும் சிகிச்சை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
    • விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்உத்தரவிடப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, இராதாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மழைக்காலத்தினால் பரவும் காய்ச்சலை கட்டுப்ப டுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என மாவட்ட கலெக்டர் மோகன் இன்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கு வழங்க ப்படும் சிகிச்சை உரிய முறையில் உள்ளதா என அவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், புறநோயாளிகள் பதிவு செய்யும் இடம், மருந்தகம் உள்ளிட்ட பகுதி களை ஆய்வு செய்து, காய்ச்சலினால் சிகிச்சை பெறுபவர்கள், காய்ச்சலுக்கு வழங்கப்படும் சிகிச்சை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். சிகிச்சைக்கு தேவையான மருந்து மற்றும் மாத்திரைகளின் இருப்பு குறித்து கேட்டறிந்ததுடன், காய்ச்சல் பரவாமல் இருக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கூறியிருப்பதா து:-

    விழுப்புரம் மாவட்ட த்தில் 13 வட்டா ரங்களில் 65 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையங்கள் த ற்போது மழைக்காலம் மற்றும் பருவநிலை மாற்றம காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.இதனால் உடனடியாக அனைத்து தலைமை மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சுழற்சி முறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணிபுரிந்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய் தொற்றுக்கு தேவை யான மருந்து மற்றும் மாத்திரைகள் அதிகமாக வைத்துக்கொள்ளவும், கூடுதலாக மருந்து, மாத்தி ரைகள் தேவை ப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

    பொதுமக்கள் எவரு க்கேனும் காய்ச்சல் அறிகுறிகளான அதிகப்படியான உடல்வெப்பநிலை, வாந்தி, மயக்கம், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகாமையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையினை அணுகி தேவையான மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும். மேலும், 65 வயதிற்கு மேற்பட்ட இருதய பாதிப்பு, நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தொடர்காய்ச்சல் அல்லது சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் உடனடியாக சேர்ந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் தனிமனித இடைவெளி முக்கவசம் அனிந்து செல்ல வேண்டும் எனவும் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களுடன் நெருங்கி பழகுவதை தவிர்க்க வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் பொதுஇடங்களில் எச்சில் துப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் இந்த காய்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையின் மூலம் தேவையான முன்னெ ச்சரிக்கை நடவடி க்கை எடுக்க ப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த ஆய்வின்போது, துணைஇயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பொற்கொடி, மருத்துவர்கள் மரு.ஆறுமுகம், மரு.கெவிலியா, மரு.சரண்யா உட்பட பலர் உடனிருந்தனர்.

    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த காய்ச்சல் சளி, போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்
    • குழந்தைகள் அவர்களது பெற்றோர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    கடலூர்:

    தமிழக முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் அதிகமாக பரவி வருகிறது. இதனால் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அலைமோதுகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த காய்ச்சல் சளி, போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை வழக்கத்தை விட தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் தற்போது குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அவர்களது பெற்றோர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதனால் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது. இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் பெரியவர்களும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவர்களும் நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை பெற்று செல்லும் நிலை கடலூரில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் நிலவியுள்ளது.

    இதனையடுத்து சுகாதாரத்துறை டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் கடலூரில் பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் சிறப்பு முகம் மூலம் பொது மக்களுக்கு காய்ச்சல் சளி போன்றவை இருக்கிறதா என்பதை பரிசோதித்து அதற்கு சிகிச்சை மற்றும் இந்த காய்ச்சல் சளி பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து கணக்கு எடுத்து வருகின்றனர்.

    மேலும் நகராட்சி பேரூராட்சி தூய்மை பணியா ளர்கள் அனை வரும் தெருக்களிலும் வீதிகளிலும் கொசுவை ஒழிக்கும் விதமாக கொசு மருந்து அடிக்கவும் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட மக்களின் நலன் காக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும் மற்றும் பரவி வரும் காய்ச்சலை ஒழிக்க சுகாதாரத் துறை மாவட்ட நிர்வாகம் இதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர். 

    • குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • நடமாடும் மருத்துவக்குழுக்களை உருவாக்கி கிராமங்கள் தோறும் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திட வேண்டும்.

    கடலூர்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தொடர் காய்ச்சல், இருமல், சளி, தலைவலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மருத்துவமனைகள், நகராட்சி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நடமாடும் மருத்துவக்குழுக்களை உருவாக்கி கிராமங்கள் தோறும் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

    • மக்கள் ஆயிரக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் திரண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தால் மட்டுமே காய்ச்சலின் வீரியம் குறைந்து வருகின்றது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தற்போது வழக்கத்தை விட அதிக அளவில் காய்ச்சல் பரவி உடல்நிலை பாதிக்கப்பட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் திரண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் பரவி வருகின்றது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடந்த சில தினங்களாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் பெரும்பாலானோருக்கு வரும் காய்ச்சல் உடனடியாக சரியாக வில்லை.

    அதற்கு மாறாக காய்ச்சல் காரணமாக பரிசோதனை மேற்கொண்டால் பலருக்கு வைரல், டைபாய்டு, டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சிலருக்கு என்ன காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது என்பது தெரியாமல் தொடர்ந்து சிகிச்சை பெற்று மாத்திரை உட்கொண்டு வருவதை காண முடிகிறது. மேலும் தற்போது பரவக்கூடிய இந்த காய்ச்சல் குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்கு மேலாக காய்ச்சலின் வீரியம் குறையாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தால் மட்டுமே காய்ச்சலின் வீரியம் குறைந்து வருகின்றது.

    இது மட்டும் இன்றி ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் வீட்டில் உள்ள அனைவருக்கும் எளிதாக காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் சற்று பீதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்தில் தற்போது சில தினங்களாக தொடர் மழையும், காலை நேரங்க ளில் வெயில் அடித்து வருவதால் சீதோசனம் மாற்றம் காரணமாக இந்த காய்ச்சல் பரவுகிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தெரியாமல் மக்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

    இது மட்டும் இன்றி காய்ச்சல் ஏற்பட்ட வர்களுக்கு சளி, இரும்பல் போன்ற நோய்களும் ஏற்பட்டு அவதியடைந்து வருவதை யும் காணமுடிகிறது. இந்த நிலையில் இன்று காலை கடலூர் அரசு மருத்துவ மனையில் காய்ச்சல் ஏற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் நின்று டோக்கன் பெற்றுக் கொண்டு சிகிச்சை க்காக காத்துக் கொண்டிருந்ததை காண முடிந்தது. மேலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் இதுபோன்ற காய்ச்சல் திடீரென்று அதிகரித்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருவதை தனி கவனம் செலுத்தி அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து குடிக்கும் தண்ணீரில் பிரச்சனையா? அல்லது இதற்கு வேறு ஏதேனும் காரணமா? என்பதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே பெரிய மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் இவரது மகன் பரமாத்மா (வயது31) இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி செந்தாமரை என்கிற மனைவியும், கனிஷ்கா (வயது 3), யோகஸ்ரீ (10 மாத குழந்தை) உள்ளனர்.

    இந்நிலையில் யோகஸ்ரீக்கு கடந்த மாதம் 15-ந்தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் பெற்றோர் வாணியம்பாடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை அளித்தும் குணமாகாததால் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த யோகஸ்ரீ, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

    இது குறித்து தந்தை பரமாத்மா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவக் மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • ரெக்டாகட்டா கிராமம் மற்றும் அதனை சுற்றி 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதிகளில் இருந்து மண் மற்றும் குடிநீரை அதிகாரிகள் எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர்.
    • சத்தீஷ்கர் மாநிலத்தில் பருவமழை தொடங்கும் சமயத்தில் மர்ம நோய் பரவி வருவது மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

    ராய்பூர்:

    சத்தீஷ்கர் மாநிலத்தில் ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து 50 பேர் இறந்த சம்பவம் அக்கிராம மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    அங்குள்ள சுஷ்மா மாவட்டத்தில் ரெக்டாகட்டா என்ற கிராமம் உள்ளது. தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த கிராமத்தில் சுமார் 800 பேர் வசித்து வருகின்றனர்.

    எந்தவித போக்குவரத்து வசதியும் இல்லாமல் உள்ள இந்த கிராமத்தை கடந்த 2 ஆண்டுகளாக மர்ம காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால்களில் வீக்கம் ஏற்படும், மேலும் காய்ச்சலுடன் குமட்டலும் உண்டாகும். இப்படி அறிகுறி உள்ளவர்களுக்கு எந்த சிகிச்சை அளித்தாலும் பலன் அளிப்பது இல்லை.

    அவர்கள் மரணம் அடைந்து விடுகிறார்கள். இப்படி தொடர்ச்சியாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 50 பேர் மர்ம நோய் தாக்கி இறந்து விட்டனர். 6 மாதங்களில் மொத்தம் 61 பேர் மரணத்தை தழுவி உள்ளனர். மேலும் பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இது எந்த வகையான நோய் என்பது தெரியாமல் கிராம மக்கள் தவித்து வருகிறார்கள். உயிர் பயத்தில் அவர்கள் நாட்களை கடத்தி வருகிறார்கள்.

    இதையடுத்து ரெக்டாகட்டா கிராமம் மற்றும் அதனை சுற்றி 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதிகளில் இருந்து மண் மற்றும் குடிநீரை அதிகாரிகள் எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். அதன் அடிப்படையில் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    சத்தீஷ்கர் மாநிலத்தில் பருவமழை தொடங்கும் சமயத்தில் மர்ம நோய் பரவி வருவது மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

    • தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு சிறுமிகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் மர்ம காய்ச்சல் அவர்களுக்கு ஏற்பட்டதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காசிநாதபுரம் கீழ தெருவை சேர்ந்தவர் பழனி. கூலி தொழிலாளி. இவரது மகள் சுப்ரியா(வயது 7). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சொரிமுத்து.

    இவரது மகள் பூமிகா(6). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த 2 சிறுமிகளுக்கும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதன் பாதிப்பு தீவிரம் அடைந்ததால் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பூமிகா உயிரிழந்தார். மிகவும் கவலைக்கிடமாக இருந்த சிறுமி சுப்ரியாவும் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் காசிநாதபுரம் கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு சிறுமிகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் மர்ம காய்ச்சல் அவர்களுக்கு ஏற்பட்டதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவியது.

    இதையடுத்து அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு செய்ததில், வாசுதேவநல்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் காசிநாதபுரத்தின் வழியாக குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளது. அதில் ஏற்பட்ட உடைப்பில் இருந்து வெளியேறும் நீரை அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் எடுத்து பயன்படுத்தியது தான் மர்ம காய்ச்சலுக்கு காரணம் என கண்டுபிடித்தனர். தொடர்ந்து அங்கு தெருக்கள் தோறும் பிளீச்சிங் பவுடர் தூவினர். ஆலங்குளம் சுற்றுவட்டார கிராமங்களான மருதம்புத்தூர், கண்டபட்டி, புதுப்பட்டி, காசிநாதபுரம், காத்தபுரம், உடையாம்புளி, இலந்தகுளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாரத்திற்கு ஒரு முறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் இருந்து 10 கிலோமீட்டருக்கும் குறைவாகவே இந்த கிராமங்கள் உள்ளன. வற்றாத ஜீவநதி ஓடும் எங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. எங்களை கடந்து சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பல கிலோமீட்டர் தூரம் கடந்து குடிதண்ணீர் செல்கிறது. ஆனால் எங்களுக்கு வாரம் ஒரு முறை குடிநீர் வருவதே கடினமாக உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட அனைவரிடமும் முறையிட்டாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதே துயர நிலை தான் நீடிக்கிறது என்றனர்.

    ×